Friday, 1 May 2015

ஏ ர் ரஹ்மான் புதியதலைமுறை நேர்காணல்

பதிவு: புவி சுரேஷ்


புதிய தலைமுறை : ஆன்மீகம் உங்கள் வெற்றிக்கு பயன்பட்டதா?

ரஹ்மான் : முக்கியமாக நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் எல்லாமே பாதுகாப்பின்மையால் வருவதுதான்.
நேற்றுக்கூட எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். வந்தது: ’நீங்கள் ஆபிஸ் போவதற்கு தயாராய் இருக்கிறீர்கள். அந்த சமயத்தில் உங்கள் மகள், உங்கள் மீது காபியை கொட்டி விடுகிறாள். கொட்டியது கொட்டியதுதான். அதை, இல்லை என்று செய்ய முடியாது. அந்தச் சமயத்தில் கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, ‘அடுத்த முறை பார்த்து வேலை செய். கொட்டாமல் பார்த்துக்கொள்’ என்று சொல்லலாம் அல்லது கோபத்தோடு பளாரென்று ஓர் அடி அடித்துவிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, லேட்டானதற்கு பரபரப்பாகி, ஒன்றுமில்லாத விஷயத்திற்க்கு நேரத்தையும் சக்தியையும் வீணாக்கலாம்.
அந்த மாதிரி சமயங்களில் என்ன செய்வீர்கள்? நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன.. ஒன்று, மன்னிக்கும் வாய்ப்பு. இரண்டு, பிரச்சனை செய்வது.

இதுமாதிரி ஒவ்வொரு சூழலுக்கும் தேர்வுகள் பல இருக்கும்.வெவ்வேறு சூழல்களிலும் பொறுமையாக யோசித்து முடிவெடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும். ஒரு மரணம் நிகழ்கிறதென்றால், அதை வைத்து மேலும் மரணங்களில் எண்ணிக்கையைப் பெரிதாக்குவதுபோ ல பிரச்சினையை மேலும் பெரிதாக்க வாய்ப்புகள் அமைகின்றன.இப்பட ி எந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பதை யோசிக்க வேண்டியிருக்கிற து.நடந்த விஷயத்தை விட்டுவிட்டு பாஸிட்டுவாகப் போகலாமா அல்லது அதை மேலும் நெகட்டிவாக்கலாம ா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.இதுமாதிரி அமைதியாக யோசித்து முடிவெடுக்க எனக்கு ஆன்மீகம் கைகொடுக்கிறது.இசைக்கும் அது உதவுகிறது

No comments:

Post a Comment