Thursday, 13 November 2014

Lingaa songs lyrics revealed

The audio launch of Superstar Rajinikanth’s Lingaa is slated to happen on November 16th and the fans are excited to know what music director AR Rahman has come up with. Ace lyricist Vairamuthu has revealed the lyrics of couple of songs today.

En Mannava 

பெண் : என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு – ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை – ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை
பெண் : சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் – இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே
பெண் : நூறு யானைகளின்
தந்தம் கொண்டு ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
ஆண் : தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிகாரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி
ஆண் : வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்றமன்னன் உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண் : சிற்றின்பம் தாண்டிப்
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா
ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தேன் – இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டேன்
பெண் : அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?

Unmai Orunal Vellum

நன்மை செய்து துன்பம் பெற்ற ரஜினியின் உடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்லும் பாடல்:
உண்மை ஒருநாள் வெல்லும் – இந்த
உலகம் உன்பேர் சொல்லும் – அன்று
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்போல் வீசும் – ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும் – அன்று
நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே
ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய் – உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
*
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர்யானை வீழ்ந்தாலும் – அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
*
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் – அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது

No comments:

Post a Comment